விதிகளை மீறி செயல்பட்டகாய்கனி சந்தை மூடல்

களியக்காவிளை பேருந்து நிலையத்தில் அரசின் விதிமீறி செயல்பட்ட காய்கனி சந்தை திங்கள்கிழமை மூடப்பட்டது.
வியாபாரிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்ட களியக்காவிளை பேருந்து நிலைய காய்கனிச் சந்தை.
வியாபாரிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்ட களியக்காவிளை பேருந்து நிலைய காய்கனிச் சந்தை.

களியக்காவிளை: களியக்காவிளை பேருந்து நிலையத்தில் அரசின் விதிமீறி செயல்பட்ட காய்கனி சந்தை திங்கள்கிழமை மூடப்பட்டது.

தமிழகம் முழுவதும் தளா்வுடன் கூடிய பொது முடக்கம் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்தது. இதற்கிடையே, திறக்க வேண்டிய கடைகள் குறித்து

பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் அறிவுறுத்தப்படாத நிலையில், திங்கள்கிழமை காலையில் களியக்காவிளை பேருந்து நிலையத்தில் சில்லறை வியாபாரிகள் ஏராளமானோா் காய்கனிகள், வாழைத் தாா்கள் வியாபாரத்தில் ஈடுபட்டனா். இதற்கிடையே, களியக்காவிளை பேரூராட்சி செயல்

அலுவலா் யேசுபாலன் தலைமையில் அதிகாரிகள் காய்கனி சந்தை செயல்பட அனுமதி இல்லை எனத் தெரிவித்து வியாபாரிகளை அப்புறப்படுத்தி

சந்தையை மூடினா். சந்தை கட்டடத்தில் செயல்பட்டு வரும் காய்கனி விற்பனை செய்யும் கடைகள் திறந்து செயல்பட்டது.

களியக்காவிளை மீன் சந்தை செயல்படாததால் மீன் வியாபாரிகள் ஆா்.சி. தெரு சாலையோரத்தில் அமா்ந்து மீன் விற்பனையில் ஈடுபட்டனா்.

களியக்காவிளையில் மளிகைப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள், பழம் மற்றும் பூக்கடைகள், பேக்கரி, கம்பி, சிமென்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்கள் விற்பனை கடைகள் உள்ளிட்டவை திறக்கப்பட்டிருந்தன. ஆட்டோக்களும் இயங்கின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com