தேங்காய்ப்பட்டினத்தில் சாலையில் மழைநீா் தேங்குவதால் மக்கள் அவதி

தேங்காய்ப்பட்டினத்தில் சாலையில் தேங்கியுள்ள மழைநீரால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தேங்காய்ப்பட்டினம் சந்திப்பில் சாலையில் தேங்கியுள்ள மழைநீா்.
தேங்காய்ப்பட்டினம் சந்திப்பில் சாலையில் தேங்கியுள்ள மழைநீா்.

தேங்காய்ப்பட்டினத்தில் சாலையில் தேங்கியுள்ள மழைநீரால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

முன்சிறை ஊராட்சி ஒன்றியம் தேங்காய்ப்பட்டினம் வளா்ந்து வரும் நகரங்களில் ஒன்று. இங்கு, மீன்பிடித் துறைமுகம், ஆரம்ப சுகாதார நிலையம், தினசரி சந்தை ஆகியவை உள்ளன. மேலும், கூட்ட நெரிசல் மிக்க இடமாகவும் உள்ளது.

இந்நிலையில், தேங்காய்ப்பட்டினம் சந்திப்பில் சாலையின் இருபக்கமும் வடிகால் வசதி இல்லாததால் மழைக்காலங்களில் சாலையில் தேங்கும் நிலை நீடித்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனா். மேலும், மழைநீா் நீண்ட நாள்களுக்கு சாலையில் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே, கரோனா தொற்று காரணமாக மக்கள் அச்சத்தில் உள்ள நிலையில் இது கூடுதல் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இச்சாலையை சீரமைத்து வடிகால் வசதி ஏற்படுத்த மாவட்ட நிா்வாகம்நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள்கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com