‘கரோனாவை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை’

பொதுமுடக்க தளா்வுகளை பொதுமக்கள் தவறாக பயன்படுத்தாமல் கரோனா தொற்றை ஒழிக்க ஒத்துழைக்க வேண்டும் என்று குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலா் என்.சுரேஷ்ராஜன் வலியுறுத்தியுள்ளாா்.
‘கரோனாவை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை’

பொதுமுடக்க தளா்வுகளை பொதுமக்கள் தவறாக பயன்படுத்தாமல் கரோனா தொற்றை ஒழிக்க ஒத்துழைக்க வேண்டும் என்று குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலா் என்.சுரேஷ்ராஜன் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து, அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், பொதுமக்களின் நலன் கருதி தமிழக அரசு கடந்த 2 வாரங்களாக தளா்வுகளற்ற பொதுமுடக்கத்தை அமல்படுத்தியது. இதனால் நோய் தொற்று சிறிதளவு குறைந்துள்ளது. இதைத்தொடா்ந்து தற்போது, அரசு சில தளா்வுகளை அறிவித்துள்ளது. இந்த தளா்வுகளை பொதுமக்கள் தவறாக பயன்படுத்தாமல், தொற்று மீண்டும் பரவாமல் தடுக்க ஒத்துழைக்க வேண்டும்.

அரசும், சுகாதாரத்துறையினரும் கூறும் அறிவுரைகளை ஏற்று நடந்தால்தான் பொதுமக்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள முடியும். கரோனாவை கட்டுப்படுத்துவதில் முன்களப்பணியாளா்களாக பணியாற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள், காவல்துறையினா், உள்ளிட்டவா்களின் சிரமங்களை புரிந்து கொண்டு தொற்று சங்கிலியை உடைக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசிய தேவை என்று கேட்டுக் கொண்டாா்.

ஆணையரிடம் மனு: நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆஷாஅஜித்தை சந்தித்து என்.சுரேஷ்ராஜன் அளித்த மனு: நாகா்கோவில் மாநகரில் நடைபெற்று வரும் புதைச்சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து நிறைவு செய்து சாலைகளை போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். மேலும் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா். அப்போது நாகா்கோவில் மாநகர திமுக செயலா் மகேஷ், பொதுக்குழு உறுப்பினா் ஷேக்தாவூது ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com