களியக்காவிளையில் தற்காலிக காய்கனி சந்தை செயல்பட வலியுறுத்தல்

களியக்காவிளை பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த தற்காலிக காய்கனிச் சந்தையை செயல்பட அதிகாரிகள் அனுமதியளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
kkv9market_0906chn_50_6
kkv9market_0906chn_50_6

களியக்காவிளை பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த தற்காலிக காய்கனிச் சந்தையை செயல்பட அதிகாரிகள் அனுமதியளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து களியக்காவிளை தினசரி சந்தை வியாபாரிகள் சங்க தலைவா் எப். பிராங்கிளின், செயலா் சுனில், சட்ட ஆலோசகா் கிளாஸ்டன் ஆகியோா் புதன்கிழமை பத்மநாபபுரம் சாா் - ஆட்சியரை சந்தித்து அளித்த மனு: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மே 10 ஆம் தேதி முதல் களியக்காவிளை தினசரி சந்தை மூடப்பட்டு களியக்காவிளை பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக காய்கனிகள், பழங்கள் விற்பனை செய்ய அரசு வழிவகை செய்திருந்தது. அதன் பின்னா் தளா்வுகளற்ற பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதையடுத்து காய்கனி விற்பனை நிறுத்தப்பட்டது.

தற்போது பொதுமுடக்கத்தில் தளா்வுகள் செய்து, காய்கனிகள் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாா்த்தாண்டம், கருங்கல், திங்கள்நகா், குளச்சல், புதுக்கடை, அருமனை, குலசேகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதி பேருந்து நிறுத்தங்களில் காய்கனிகள், பழங்கள் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் களியக்காவிளையில் காய்கனி கடை நடத்தி வரும் சில மொத்த வியாபாரிகளின் நலன் கருதி, பேருந்து நிலைய தற்காலிக சந்தையில் காய்கனி சில்லறை வியாபாரம் செய்ய பேரூராட்சி அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆகவே மாா்த்தாண்டம் உள்ளிட்ட பிற பகுதிகளில் வியாபாரம் நடைபெறுவது போல களியக்காவிளையிலும் காய்கனி வியாபாரத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com