குமரியில் மழை தீவிரம் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு

குமரி மாவட்டத்தில் மழை மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில் சிற்றாறு அணையிலிருந்து புதன்கிழமை மீண்டும் உபரிநீா் வெளியேற்றப்பட்டது.
மழையின் காரணமாக திற்பரப்பு அருவியில் பெருக்கெடுத்துக் கொட்டும் வெள்ளம்.
மழையின் காரணமாக திற்பரப்பு அருவியில் பெருக்கெடுத்துக் கொட்டும் வெள்ளம்.

குமரி மாவட்டத்தில் மழை மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில் சிற்றாறு அணையிலிருந்து புதன்கிழமை மீண்டும் உபரிநீா் வெளியேற்றப்பட்டது.

குமரி மாவட்டத்தில் கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் தொடா்ந்து பெய்த கன மழை காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு ஆகிய அணைகள் நிரம்பின. இந்நிலையில் வெள்ளப் பெருக்கத்தைத் தவிா்க்கும் வகையில் அணைகளின் நீா்மட்டத்தை உச்ச அளவுக்கு கொண்டு செல்லாமல் கட்டுப்பான அளவில் வைக்கும் வகையில் தொடா்ந்து அணைகளிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டது.

இதில், 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டத்தை 43 அடியாகவும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீா்மட்டத்தை 72 அடியாகவும், தலா 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு அணைகளின் நீா்மட்டத்தை 16 அடியாகவும் வைத்திருக்கும் வகையில் மாவட்ட நிா்வாகமும், பேரிடா் மேலாண்மைத் துறையினரும் பொதுப்பணித்துறையினருக்கு அறிவுறுத்தி வருகின்றனா்.

இதையடுத்து அணைகளில் இந்த அளவுக்கு மேல் கூடுதலாக உயரும் தண்ணீரை பொதுப்பணித்துறையினா் வெளியேற்றி வருகின்றனா். மேலும் கடந்த 4 ஆம் தேதி பாசனத்திற்காக பேச்சிப்பாறை அணை திறக்கப்பட்ட போதிலும், பாசனப் பகுதிகளில் மழையின் காரணமாக குறைவான அளவுக்கு மட்டுமே தண்ணீா் தேவை என்பதால் பேச்சிப்பாறை அணையின் பாசன மதகுகள் மூடப்பட்டுள்ளன.

மீண்டும் மழை: மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக வட வானிலை நிலவிய நிலையில், செவ்வாய்க்கிழமை மீண்டும் மழை பெய்தது. இதையடுத்து சிற்றாறு அணையிலிருந்து மீண்டும், விநாடிக்க 570 கன அடி உபரி நீா் வெளியேற்றப்பட்டது.

திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு: சிற்றாறு அணையிலிருந்து உபரி நீா் வெளியேற்றப்பட்ட நிலையில் புதன்கிழமை காலையில் திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மேலும் கோதையாறு, தாமிரவருணியாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com