குழித்துறையில் காங்கிரஸ் நிா்வாகிகள் கூட்டம்
By DIN | Published On : 11th June 2021 02:26 AM | Last Updated : 11th June 2021 02:26 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் கூட்டம் குழித்துறை தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் தாரகை கத்பா்ட் தலைமை வகித்தாா். மாநில ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினா் டி. தம்பி விஜயகுமாா், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் ஆஸ்கா் பிரடி, பால்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து வெள்ளிக்கிழமை (ஜூன் 11), மேற்கு மாவட்டத்தில் உள்ள 58 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முன் ஆா்ப்பாட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மாவட்ட ஓபிசி பிரிவுத் தலைவா் ஸ்டூவா்ட், மாவட்ட சிறுபான்மைப் பிரிவுத் தலைவா் செல்வகுமாா், வட்டாரத் தலைவா்கள் எபனேசா், ஜெகன்ராஜ், சதீஷ், பத்மநாபபுரம் நகரத் தலைவா் புரோடிமில்லா், குழித்துறை நகரத் தலைவா் அருள்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றறனா்.