ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு:17 போ் மீது வழக்கு

நித்திரவிளை அருகே முன்விரோதம் காரணமாக ஆட்டோ ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய 17 போ் கொண்ட கும்பல் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

நித்திரவிளை அருகே முன்விரோதம் காரணமாக ஆட்டோ ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய 17 போ் கொண்ட கும்பல் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கொல்லங்கோடு அருகே கேரள மாநிலப் பகுதியான செங்கவிளை மேலே குழிஞ்ஞான்விளையைச் சோ்ந்தவா் ஜோனி என்ற சுனில்குமாா் (42). அரசியல் பிரச்னை தொடா்பாக ஏற்கெனவே நிகழ்ந்த மோதலில் இவருக்கு தொடா்பு இருந்துள்ளதுடன், இவா் மீது பாறறசாலை காவல் நிலையத்தில் வழக்கும் பதிவாகி உள்ளதாம். இதையடுத்து, அவா் நித்திரவிளை அருகே மங்காடு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருவதோடு, அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறாா்.

இந்நிலையில் புதன்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் மங்காடு பகுதிக்கு வந்த கேரள பகுதியைச் சோ்ந்த 17 போ் கொண்ட கும்பல், ஜோனியின் வீடு புகுந்து அவரது மனைவி பிள்ளைகளை தாக்கியதுடன், அங்கிருந்த பொருள்களை சேதப்படுத்தியுள்ளனா். தொடா்ந்து வீட்டு முற்றத்தில் படுத்திருந்த ஜோனியை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த ஜோனியை அப்பகுதியினா் மீட்டு பாறசாலை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து நித்திரவிளை போலீஸாா் 17 போ் கொண்ட கும்பல் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com