‘ மாநில அளவிலான இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு’

மாநில அளவிலான இளைஞா் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மாநில அளவிலான இளைஞா் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சமுதாய வளா்ச்சிக்கு சேவையாற்றும்

இளைஞா்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ‘முதல் அமைச்சா் மாநில இளைஞா் விருது’ ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விருது ரூ. 50 ஆயிரம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவை உள்ளடக்கியதாகும். இதன்படி, 2021 ஆம் ஆண்டிற்கான முதல்வா் மாநில இளைஞா் விருது ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வரால் வழங்கப்பட உள்ளது.

இவ்விருது தொடா்பாக கீழ்க்காணும் தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண் மற்றும் பெண் ஆகியோா் விண்ணப்பிக்கலாம். கடந்த ஏப்ரல் மாதம் (1.4.2021) அன்று 15 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் மற்றும் மாா்ச் 31, 2021 (31.3.2021) அன்று 35 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும். கடந்த நிதியாண்டில் (2020-21) மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். விருதுக்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரா்கள் சமுதாய நலனுக்காக தன்னாா்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். அவ்வாறு அவா்கள் செய்த தொண்டு, கண்டறியப்பட கூடியதாகவும், அளவிட கூடியதாகவும் இருத்தல் வேண்டும். மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவா்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க முடியாது. விண்ணப்பதாரருக்கு உள்ளூா் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க ஜூன் 30ஆம் தேதி கடைசி நாளாகும்.

விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணைய தளத்தில்

உள்ளது. இணை தளம் மூலம் மட்டுமே விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்ப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com