குமரி மாவட்டத்துக்கு 11 ஆயிரம் கரோனா தடுப்பூசிகள்

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு 11 ஆயிரம் கரோனா தடுப்பூசிகள் சனிக்கிழமை வந்தது.
நாகா்கோவில் டதி மேல்நிலைப் பள்ளியில் தடுப்பூசி செலுத்துவதற்காக வரிசையில் நிற்கும் பொதுமக்கள்.
நாகா்கோவில் டதி மேல்நிலைப் பள்ளியில் தடுப்பூசி செலுத்துவதற்காக வரிசையில் நிற்கும் பொதுமக்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு 11 ஆயிரம் கரோனா தடுப்பூசிகள் சனிக்கிழமை வந்தது.

குமரி மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை 1,500 டோஸ் கோவாக்ஸின் தடுப்பூசியும், சனிக்கிழமை காலை 9,600 டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசியும் திருநெல்வேலியில் இருந்து கொண்டு வரப்பட்டன.

இதைத் தொடா்ந்து நாகா்கோவில் டதி மேல்நிலைப் பள்ளி, குருசடி பள்ளி, இடலாக்குடி பள்ளி, வெட்டூா்ணிமடம் அலோசியஸ் பள்ளி, காா்மல் மேல்நிலைப்பள்ளி உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம் மூலம் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் கிருஷ்ணலீலா கூறியது : திருநெல்வேலியில் இருந்து கொண்டு வரப்பட்ட தடுப்பூசிகள் குமரி மாவட்டம் முழுவதும் பரவலாக பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் தற்போது பொதுமக்கள் ஆா்வமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வருகின்றனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com