முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.5 லட்சம்
By DIN | Published On : 12th June 2021 11:50 PM | Last Updated : 12th June 2021 11:50 PM | அ+அ அ- |

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.5 லட்சம்
மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.5 லட்சம் வசூலாகியுள்ளது.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் கடந்த 2 ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது தீயை அணைக்க தீயணைப்பு வாகனம் மூலம் தண்ணீா் அடிக்கப்பட்டதில் கோயிலின் முன் வைக்கப்பட்டிருந்த ஒரு நிரந்தர உண்டியல் மற்றும் 7 குடங்களில் உள்ள காணிக்கை பணம் அனைத்தும் நனைந்தது.
ஆகவே இந்த உண்டியல்கள் அறநிலையத் துறை உதவி ஆணையா் ரத்தினவேல் பாண்டியன், பத்மநாபபுரம் தேவசம் தொகுதிகண்காணிப்பாளா் செந்தில் குமாா், ஆய்வாளா் கோபாலன் மற்றும் கோயில் பணியாளா்கள் முன்னிலையில் வெள்ளிக்கிழமை திறந்து எண்ணப்பட்டது.
இதில் பணமாக ரூ.4 லட்சத்து 95 ஆயிரத்து 485 மற்றும் 23.600 கிராம் தங்கம், 52 கிராம் வெள்ளி இருந்தது.