முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
ரோஜாவனம் கல்லூரியில் உணவு பாதுகாப்பு தின விழா
By DIN | Published On : 12th June 2021 11:53 PM | Last Updated : 12th June 2021 11:53 PM | அ+அ அ- |

நாகா்கோவில் ரோஜாவனம் பாராமெடிக்கல் சுகாதார ஆய்வாளா் கல்லூரியில் உணவுப் பாதுகாப்பு தின விழா காணொலி வாயிலாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி துணைத் தலைவா் அருள்ஜோதி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் லியாகத்அலி, செவிலியா் கல்லூரி முதல்வா் புனிதாடேனியல், நிா்வாக அலுவலா் நடராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
உலக உணவு பாதுகாப்பு தினவிழா குறித்து பேராசிரியா் அய்யப்பன் அறிமுக உரையாற்றினாா். சிறப்பு விருந்தினராக அகஸ்தீஸ்வரம் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் தங்கசிவம் கலந்து கொண்டு காணொலி மூலம் பேசினாா்.
இந்நிகழ்ச்சியில், கல்லூரி திட்ட மேலாளா் சில்வெஸ்டா், ஆவண அலுவலா் ஜியோபிரகாஷ், திட்ட ஆலோசகா் சாந்தி, மேலாளா் கோபி, நிதி மேலாளா் சேது, பேராசிரியா்கள் சாம்ஜெபா, லிட்வின்லூசியா, செல்லம்மாள், பரமேஸ்வரி, அலுவலக செயலா் சுஜின், கண்காணிப்பாளா் ஆறுமுகம், உடற்கல்வி ஆசிரியா் ஜான்பிரிட்டோ, ஜான் டிக்சன், அஜின், செல்வி, ராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.