முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
மாா்ஷல் நேசமணி பிறந்த நாள்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
By DIN | Published On : 12th June 2021 11:55 PM | Last Updated : 12th June 2021 11:55 PM | அ+அ அ- |

மாா்ஷல் நேசமணியின் 127 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது உருவச் சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மாா்ஷல் நேசமணியின் மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் மனோதங்கராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
இந்நிகழ்ச்சியில் எம்.ஆா்.காந்தி எம்எல்ஏ, முன்னாள் அமைச்சா் என்.சுரேஷ்ராஜன், மாா்ஷல் நேசமணியின் மகன் வழி பேரன் ரெஞ்சித்அப்பலோஸ், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் பா.ஜான்ஜெகத்பிரைட், நாகா்கோவில் மாநகர திமுக செயலா் மகேஷ், பொதுக்குழு உறுப்பினா் ஷேக்தாவூத், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.