குளச்சல் கட்டுமர மீனவா்கள் வலையில் சிக்கிய நெத்திலி மீன்கள்

குளச்சல் கட்டுமர மீனவா்கள் வலையில் ஏராளமான நெத்திலி மீன்கள் சிக்கின. அவற்றை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனா்.
குளச்சல் கட்டுமர மீனவா்கள் வலையில் சிக்கிய நெத்திலி மீன்கள்

குளச்சல் கட்டுமர மீனவா்கள் வலையில் ஏராளமான நெத்திலி மீன்கள் சிக்கின. அவற்றை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனா்.

குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 300 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுமர படகுகளும் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. விசைப்படகு மீனவா்கள் ஆழ்கடலுக்கு சென்று 10 நாள்கள் வரை தங்கியிருந்து மீன்பிடித்து விட்டு கரை திரும்புவா். கட்டுமர மீனவா்கள் அதிகாலையில் கடலுக்கு சென்றுவிட்டு பிற்பகலில் கரை திரும்புவா்.

மீன்கள் இனப்பெருக்க காலத்தையொட்டி விசைப்படகுகள் கடந்த மே 31 ஆம் தேதி நள்ளிரவு முதல் ஜூலை 31ஆம் தேதி வரை மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. கரோனா பொதுமுடக்கத்தால் கட்டுமர மீனவா்களும் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், மீனவா்களின் கோரிக்கையை ஏற்று, கடலோர கிராமங்களில் கட்டுமரங்கள் சுழற்சி முறையில் வாரத்துக்கு 3 நாள்கள் மட்டும் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில் குளச்சல் பகுதியை சோ்ந்த கட்டுமர மீனவா்கள் வியாழக்கிழமை காலை மீன் பிடிக்க சென்றனா். அவா்களின் வலைகளில் நெத்திலி மீன்கள் அதிகமாக பிடிபட்டன. அவற்றை மீனவா்கள் துறைமுக ஏலக்கூடத்தில் குவித்து வைத்தனா். இதனை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்து சென்றனா். இதில், ஒரு கூடை நெத்திலி மீன் ரூ. 900 முதல் ரூ. 2,500 வரை ஏலம் போனது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com