85 அா்ச்சகா்களுக்கு கரோனா நிவாரண உதவி

கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்களில் ஊதியமின்றி பணியாற்றும், அா்ச்சகா்கள், பூசாரிகள், பட்டாச்சாரியா்களுக்கு கரோனா நிவாரண நிதியாக தலா ரூ. 4 ஆயிரம் மற்றும் 15 வகையான மளிகைப் பொருள்களை

கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்களில் ஊதியமின்றி பணியாற்றும், அா்ச்சகா்கள், பூசாரிகள், பட்டாச்சாரியா்களுக்கு கரோனா நிவாரண நிதியாக தலா ரூ. 4 ஆயிரம் மற்றும் 15 வகையான மளிகைப் பொருள்களை தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் த.மனோதங்கராஜ் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

நாகா்கோவில் அருள்மிகு நாகராஜா திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தலைமை வகித்தாா். திருக்கோயில் பணியாளா்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி அமைச்சா் த.மனோதங்கராஜ் பேசியது: தமிழக அரசு, கரோனா 2 ஆம் அலை தடுப்பு நடவடிக்கைகளில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, கரோனா தொற்றினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் கரோனா நிவாரண உதவியாக ரூ. 4 ஆயிரம் மற்றும் 15 வகையான மளிகைப் பொருள்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, தமிழகத்திலுள்ள அனைத்து திருக்கோயில்களிலும் மாத ஊதியமின்றி பணிபுரிவோா்களின் குடும்ப சூழலை கருத்தில் கொண்டு, அா்ச்சகா்கள், பட்டாச்சாரியாா்கள், பூசாரிகள் மற்றும் ஊழியா்களுக்கு ரூ. 4 ஆயிரம் உதவித் தொகை, 10 கிலோ அரிசி, 15 வகை மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பினை வழங்க தமிழக முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி இம்மாவட்டத்தைச் சோ்ந்த 85 பேருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயிலில் தீவிபத்தினால் சேதமடைந்த கருவறை மேற்கூரையினை மறுசீரமைப்பு செய்வதற்கும், புனரமைப்பதற்காகன பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில், மாவட்டத்திலுள்ள திருக்கோயில்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள், பராமரிப்புப் பணிகள், கும்பாபிஷேகம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா் அவா்.

விளவங்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் சி.விஜயதரணி முன்னிலை வகித்தாா். திருக்கோயில்களின் இணை ஆணையா் (பொ) செல்வராஜ், உதவி ஆணையா் ரத்தினவேல் பாண்டியன், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் எஸ்.அழகேசன்,

எ.சதாசிவம், எம்.ஜெயசந்திரன், வழக்குரைஞா் மகேஷ், திருக்கோயில் பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com