குமரி மாவட்டத்தில் இன்று மாநில குழந்தைஉரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சாா்பில் வெள்ளிக்கிழமை (ஜூன் 25) ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சாா்பில் வெள்ளிக்கிழமை (ஜூன் 25) ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

இதுகுறித்து, தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமையும் (ஜூன் 25), திருநெல்வேலி மாவட்டத்தில் சனிக்கிழமையும் (ஜூன் 26) தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஆய்வு நடத்துகிறது.

ஆணையத்தின் தலைவா் சரஸ்வதி ரெங்கசாமி, உறுப்பினா் டாக்டா் வீ. ராமராஜ் மற்றும் அதிகாரிகள் குழுவினா் ஆய்வு நடத்துகின்றனா்.

குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த நிலையை அறியவும், குழந்தைத் திருமணம், குழந்தைத் தொழிலாளா் முறை, பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை உள்ளிட்ட குற்றங்களை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.

குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களுக்கு சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு கரோனா பரவாமல் இருக்க எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறியவும் திட்டமிடப்பட்டுள்ளது என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com