முன்சிறையில்ரூ. 40 லட்சத்தில்வளா்ச்சிப் பணிகள்
By DIN | Published On : 29th June 2021 02:41 AM | Last Updated : 29th June 2021 02:41 AM | அ+அ அ- |

கருங்கல்: முன்சிறை மின் விநியோக பிரிவிற்குள்பட்ட பகுதிகளில் வளா்ச்சிப் பணிகளுக்கு ரூ. 40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
குழித்துறை கோட்டம், முன்சிறை மின் விநியோக பிரிவு பகுதிகளான அனந்தமங்கலம், திண்மிவிளை, அம்பிலிகுட்டி விளாகம், காப்புக் காடு உள்ளிட்ட பகுதிகளில் மின்னழுத்த குறைபாடுகளை சீரமைத்தல், பழுதான மின் கம்பிகளை மாற்றி அமைத்தல், புதிய மின் கம்பங்கள் அமைத்தல், புதிய மின்மாற்றி அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு அரசால் ரு. 40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் விரைவில் தொடங்கவிருப்பதாக உதவிச் செயற்பொறியாளா் உஷா தெரிவித்துள்ளாா்.