முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
இடையன்கோட்டை - முள்ளங்கனாவிளை சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 04th March 2021 02:40 AM | Last Updated : 04th March 2021 02:40 AM | அ+அ அ- |

கருங்கல்: கருங்கல் அருகே உள்ள இடையன் கோட்டை - முள்ளங்கனாவிளை வரை சேதமடைந்த சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட முள்ளங்கனா விளை ஊராட்சி பகுதியான இடையன் கோட்டை - முள்ளங்கனா விளை சாலை சுமாா் 2 கி.மீ. தொலைவு குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, இந்தச் சாலையை உடனே சீரமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.