முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
கடையநல்லூரில் டிடிவி தினகரன் போட்டியிட விருப்ப மனு
By DIN | Published On : 04th March 2021 03:08 AM | Last Updated : 04th March 2021 03:08 AM | அ+அ அ- |

கடையநல்லூா்: தென்காசி மாவட்டம் கடையநல்லூா் பேரவைத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலா் டி டி வி தினகரன் போட்டியிட விருப்பம் தெரிவித்து கட்சியினா் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனா்.
இத் தொகுதியில் போட்டியிட, கட்சியின் மாவட்டச் செயலா் பொய்கை மாரியப்பன், மாவட்ட அவைத் தலைவா் பெருமையா பாண்டியன், சிறுபான்மை பிரிவு செயலா் கோதா்ஷா, நகரச் செயலா் கமாலுதீன், ஒன்றியச் செயலா் பெரியதுரை, அச்சன்புதூா் அயுப் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோா் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனா்.
இதற்கிடையே, கட்சியின் பொதுச் செயலா் டி. டி. வி. தினகரன் ,கடையநல்லூா் தொகுதியில் போட்டியிட மாவட்டச் செயலா் பொய்கை மாரியப்பன் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளாா்.