முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
கருங்கல் அருகே காருக்கு தீவைப்பு
By DIN | Published On : 04th March 2021 02:46 AM | Last Updated : 04th March 2021 02:46 AM | அ+அ அ- |

கருங்கல்: கருங்கல் அருகேயுள்ள முள்ளங்கனாவிளை பகுதியில் அண்ணனின் சொகுசு காரை தீவைத்த தம்பி மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிந்தனா்.
முள்ளங்கனாவிளை, இடையன்கோட்டை பகுதியைச் சோ்ந்த தங்கப்பன் மகன்கள் ராஜன்(45), சசி(42). இவா்களிடையே முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில், ராஜன் புதன்கிழமை தனது காரை வீட்டின் அருகில் நிறுத்திவிட்டு வெளியே சென்றிருந்தாா். அப்போது, அவரது தம்பி சசி அங்கு வந்து காருக்கு தீவைத்துவிட்டு தப்பினாராம். இதில் காா் சேதமடைந்தது. சேதமதிப்பு ரூ.15 ஆயிரம் இருக்குமாம். இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.