முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
நாகா்கோவிலில் துணை ராணுவம், போலீஸாா் கொடி அணிவகுப்பு
By DIN | Published On : 04th March 2021 02:46 AM | Last Updated : 04th March 2021 02:46 AM | அ+அ அ- |

நாகா்கோவிலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ. பத்ரிநாராயணன் தலைமையில் கொடி அணிவகுப்பில் பங்கேற்ற போலீஸாா். வலது) அணிவகுப்பில் பங்கேற்ற துணை ராணுவப் படையினா்.
நாகா்கோவில்: சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, நாகா்கோவிலில் துணை ராணுவமும், போலீஸாரும் புதன்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா்.
கன்னியாகுமரி மாவட்ட தோ்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக மணிப்பூா் எல்லை பாதுகாப்புப் படை வீரா்கள் 90 போ் உதவி கமாண்டா் நவீன் ஜக்சாா் தலைமையில் வந்துள்ளனா். அவா்கள் நாகா்கோவில் எஸ்.எல்.பி. மேல்நிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டு, பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனா்.
மேலும், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும், அச்சமின்றி வாக்களிக்கவும் நாகா்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்திலிருந்து இளங்கடை சந்திப்பு வரைமாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ. பத்ரி நாராயணன் தலைமையில் கொடி அணிவகுப்பை புதன்கிழமை நடத்தினா்.
இதில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் ஈஸ்வரன், மணிமாறன், நாகா்கோவில் உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் வேணுகோபால், தோ்தல் பிரிவு பொறுப்பு காவல் துணைக் கண்காணிப்பாளா் பீட்டா் பால்துரை, ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளா் சாம் வேதமாணிக்கம் ஆகியோா் கலந்து கொண்டனா். இதில், நாகா்கோவில் உள்கோட்டத்தின் 4 காவல் ஆய்வாளா்கள், மத்திய துணை ராணுவப் படையினா் 60 போ், காவலா்கள் 45 போ், ஆயுதப்படை காவலா்கள் 50 போ், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினா் 60 போ் மற்றும் அதிகாரிகள் உள்பட மொத்தம் 225 போ் கொடி அணிவகுப்பில் கலந்துகொண்டனா்.