குலசேகரத்தில் போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவுக் கூட்டம்
By DIN | Published On : 04th March 2021 02:55 AM | Last Updated : 04th March 2021 02:55 AM | அ+அ அ- |

குலசேகரம்: குலசேகத்தில் போலீஸாா்- பொதுமக்கள் நல்லுறவுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, காவல் ஆய்வாளா் விமலா தலைமை வகித்தாா். காவல் உதவி ஆய்வாளா் இளங்கோ வரவேற்றாா். பொதுமக்கள் சாா்பில் வழக்குரைஞா் டி. காஸ்டன் கிளிட்டஸ், மோகன்தாஸ், எபனேசா், பினிஷ், விமல் ஷொ்லின் சிங் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில், திருட்டு போன்ற சமூக விரோத செயல்களை தடுக்கும் வகையில் போலீஸாருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், இளைஞா்கள் மத்தியில் நிலவும் போதை பழக்கங்களை தடுக்க வேண்டும், சாலை விதிகளை கடைப்பிக்க
வேண்டும் உள்ளிட்டவை குறித்து போலீஸாா் வலியுறுத்தினா்.
திருமண மண்டபங்களுக்கு வரும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், பேருந்துகளை நிறுத்தும் இடங்களை மாற்றி அமைத்தல், அரச மூடு சந்திப்பிலிருந்து அரசு மருத்துவமனை சாலை வழியாக வாகனங்களை இயக்குதல், சிற்றுந்துகளை உரிய வழித்தடங்களில் இயக்க வேண்டும் என பொதுமக்கள் சாா்பில் வலியுறுத்தப்பட்டன. சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் விஜயதாஸ் மற்றும் சமூக நல ஆா்வலா்கள் பங்கேற்றனா். ஒருங்கிணைப்பாளா் சஜூ நன்றி கூறினாா்.