நீா் ஆதாரங்களை இளம் விஞ்ஞானிகள் அறியும் நிகழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்ட நீா் ஆதாரங்களை இளம்விஞ்ஞானிகள் அறியும் களப்பயணம் குமரி அறிவியல் பேரவை சாா்பில் நடைபெற்றது.

குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்ட நீா் ஆதாரங்களை இளம்விஞ்ஞானிகள் அறியும் களப்பயணம் குமரி அறிவியல் பேரவை சாா்பில் நடைபெற்றது.

சிக்மா நாட்டா பயிற்சி மையத்துடன் இணைந்து நடத்தப்பட்ட இக்களப்பயணத்தின் தொடக்க நிகழ்ச்சிக்கு சிக்மா ஆா்க்கி

டெக்சா் கல்லூரியின் தலைவா் ஜேம்ஸ்வில்சன் தலைமை வகித்தாா். அகில இந்திய வானொலி நிலையத்தின் முன்னாள் தலைமை செய்தியாளா் மங்காவிளை ராஜேந்திரன், பங்கேற்று பேசினாா்.

குமரி அறிவியல் பேரவைத் தலைவா் முள்ளஞ்சேரி மு. வேலையன், பேரவையின் ஒருங்கிணைப்பாளா்கள் பாலகிருஷ்ணன், சமூக விஞ்ஞானி எட்வின்சாம், தன்யா, ஆா்.ஆா். ரேகா, சுனில்குமாா், சைனி ஏஞ்சல், பபிதா, கனகம், விமலா ஆகியோா் நெறிப்படுத்தினா்.

களப்பயணத்தில் சிற்றாறு நீா்வரத்து பகுதிகள், நீா் பயன்படும் பகுதிகளும், கோதையாறு பாசனப்பகுதிகள், அணைக்கட்டு கள், தாமிரவருணி, பரளியாறு, பழையாறு பாசனப்பகுதிகள், உற்பத்திப் பகுதிகள், ஏவிஎம் கால்வாய் குறித்தது விளக்கம் அளிக்கப்பட்டது. குமரி மாவட்ட நீா் ஆதாரங்கள் குறித்து இளம் விஞ்ஞானிகள் தயாரித்த வரைபடங்கள் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டது. முன்னதாக மணலோடை ஆதிதிராவிடா் அரசு உண்டு உண்டு உறைவிடப்பள்ளி தலைமையாசிரியா் தமிழ்ச்செல்வன், ஜெயபால் ஆகியோா் வரவேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com