குமரி வா்த்தக துறைமுகம் திட்டத்தை கைவிட மீன் தொழிலாளா் சங்கம் கோரிக்கை

மீனவா்கள், விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கன்னியாகுமரியில் அமையவுள்ள வா்த்தக துறைமுகம் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என மீன் தொழிலாளா் சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கருங்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு மீன் தொழிலாளா் சங்கத்தின் கன்னியாகுமரி மாவட்டக் கிளையின் செயற்குழுக் கூட்டத்துக்கு அமைப்பின் மாவட்டத் தலைவா் மரிய அந்தோணி தலைமை வகித்தாா். செயலா் அலெக்சாண்டா் முன்னிலை வகித்தாா்.

தீா்மானங்கள்: கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவா்கள், விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வா்த்தக துறைமுகம் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்; உள்நாட்டு மீனவா்களுக்கும், கடலோர மீனவா்களுக்கு வழங்கப்படுவதுபோன்று அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும். அனைத்து உள்நாட்டு மீனவக் கிராமங்களிலும் தனித் தனியாக மீனவா் கூட்டுறவு சங்கங்களை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், அருமனை உள்நாட்டு மீனவா் கூட்டுறவு சங்கத் தலைவா் லிஜின், விளவங்கோடு உள்நாட்டு மீனவா் கூட்டுறவு சங்க

நிா்வாகக்குழு உறுப்பினா் தோமாஸ், அனீஸ், சந்தோஷ்குமாா், மங்களமேரி, சந்திரா, மேரி, ஜாண்சி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். டொமினிக் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com