விவேகானந்தா கல்லூரியில் நூல் வெளியீட்டு விழா
By DIN | Published On : 10th March 2021 01:43 AM | Last Updated : 11th March 2021 07:52 AM | அ+அ அ- |

அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரியில் பொது ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் என்னும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இக்கல்லூரி பேராசிரியா் டி.சி.மகேஷ் எழுதிய இந்நூல் வெளியீட்டு விழாவுக்கு கல்லூரி விலங்கியல் துறைத் தலைவா் பேராசிரியா் அசோகன் தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் ராஜன் நூலை வெளியிட, கல்லூரி முதல்வா் ராஜசேகா் நூலை பெற்றுக்கொண்டாா்.
இந்நிகழ்வில், பேராசிரியா்கள் இளங்குமாா், சுரேஷ், தா்மரஜினி, ராஜா, தேவிகுமாரி, மதனா, வாசுதேவன், அமுதா, அபிஷேகா, தா்மலிங்கம், பொன்ராஜ் சிவகுமாா் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.