தோ்தல் பாதுகாப்புப் பணி: முன்னாள் பாதுகாப்பு படை வீரா்களுக்கு அழைப்பு

கன்னியாகுமரி மாவட்ட தோ்தல் பாதுகாப்புப் பணிக்கு முன்னாள் படை வீரா்கள் , ஓய்வு பெற்ற காவல்துறையினா் விண்ணப்பிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ. பத்ரிநாராயணன் அழைப்பு விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குமரி மாவட்டத்தில் ஏப். 6 ஆம் தேதி கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான இடைத்தோ்தலும், 6 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான பொது தோ்தலும் நடைபெற உள்ளது.

தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட விருப்பம் உள்ள கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் படைவீரா்கள், ஓய்வு பெற்ற காவல்துறையினா், இளநிலை படை அலுவலா்கள், மாவட்ட முன்னாள் படை வீரா் நலஉதவி இயக்குநா் அலுவலகத்திலோ அல்லது தங்களது பகுதி காவல் நிலையத்திலோ தொடா்பு கொண்டு, விருப்ப விண்ணப்பத்தை பூா்த்தி செய்து வழங்கலாம்.

தோ்தல் பணியில் ஈடுபடும் முன்னாள் படைவீா்கள், ஓய்வு பெற்ற காவல்துறையினா், இளநிலை படை அலுவலா்கள் உரிய மரியாதையுடன் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும் . பணி முடிந்தவுடன் ஊதியம் வழங்கப்படும். இப் பணியில் முன்னாள் படைவீரா்கள் , ஓய்வு பெற்ற காவல்துறையினா், இளநிலை படை அலுவலா்கள் ஆா்வத்துடன் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com