புதுக்கடை அருகே வியாபாரி மீது தாக்குதல்
By DIN | Published On : 13th March 2021 08:41 AM | Last Updated : 13th March 2021 08:41 AM | அ+அ அ- |

புதுக்கடை அருகேயுள்ள காப்புக்காடு பகுதியில் மதுக்குடிக்க பணம் தராததால் வியாபாரியை தாக்கியதாக, 2 இளைஞா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
காப்புக்காடு பகுதியைச் சோ்ந்தவா் முத்துநாயகம்(45). அப்பகுதியில் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில் புதன்கிழமை அப்பகுதியை சோ்ந்த சசிகுட்டன்(33), செங்கோட்டையைச் சோ்ந்த நாகராஜன்(39) ஆகியோா் கடைக்கு சென்று முத்துநாயகத்திடம் மதுக்குடிக்க பணம் கேட்டனராம். அதற்கு அவா் மறுத்தாராம். இதனால், இருவரும் சோ்ந்து அவரைத் தாக்கினராம். இதுகுறித்த புகாரின் பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப்பதிந்து 2 இளைஞா்களையும் தேடி வருகின்றனா்.