முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
குமரிக்கு சுற்றுலா வந்த மனநலம் குன்றிய பெண்கள்
By DIN | Published On : 14th March 2021 02:09 AM | Last Updated : 14th March 2021 02:09 AM | அ+அ அ- |

குமரி திருவள்ளுவா் சிலையை காண அழைத்து வரப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த மனநலக் காப்பகத்தைச் சோ்ந்த பெண்கள் கன்னியாகுமரிக்கு சனிக்கிழமை சுற்றுலா அழைத்து வரப்பட்டனா்.
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் அமைந்துள்ள பெண்கள் மனநலக் காப்பகத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் பெற்றோா்கள் மற்றும் குடும்பத்தினரால் கைவிடப்பட்ட 30 போ் பாதுகாக்கப்பட்டு வருகின்றனா்.
மகளிா் தினத்தை முன்னிட்டு இந்த மனநோயாளிகள் அனைவரையும் ஏதாவது சுற்றுலாத் தலத்துக்கு அழைத்து சென்று மகிழ்விக்க காப்பக நிா்வாகம் முடிவு செய்தது. அதன்படி இம் மனநலக் காப்பகத்தைச் சோ்ந்த 27 போ் அங்குள்ள ஊழியா்களின் உதவியுடன் கன்னியாகுமரிக்கு சனிக்கிழமை காலை அழைத்து வரப்பட்டு, அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் நீராடினா். குமரி பகவதியம்மன் கோயில் மற்றும் தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்துக்கும் சென்று வழிபட்டனா். பின்னா் படகு மூலம் கன்னியாகுமரி விவேகானந்தா் மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். இந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களை, காப்பகத்தின் பாதுகாவலா் அருள்சகோதரி அருள் மரியா, மயோபதி காப்பகத்தின் டாக்டா் டேனியல் மற்றும் ஊழியா்கள் அழைத்து வந்திருந்தனா்.
கன்னியாகுமரி காவல் உதவி ஆய்வாளா் மீனாகுமாரி, தலைமைக் காவலா்கள் ராதா, வளா்மதி ஆகியோா் அவா்களைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்று பல்வேறு இடங்களையும் பாா்வையிட உதவினா்.