முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
தோ்தல்: வாக்குப்பதிவு மையங்களில் ஆட்சியா் ஆய்வு
By DIN | Published On : 14th March 2021 02:10 AM | Last Updated : 14th March 2021 02:10 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத் தோ்தல் மற்றும் தமிழக சட்டப் பேரவை பொதுத் தோ்தலுக்கான வாக்கு பதிவு மையங்களை, மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மா.அரவிந்த் சனிக்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா்.
கன்னியாகுமரி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட, பூதப்பாண்டியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையத்தை ஆட்சியா் பாா்வையிட்டாா். அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் வழங்கப்படவுள்ள, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்களித்ததை சரிபாா்க்கும் இயந்திரம் (யயடஅப) ஆகியவை வைக்கப்பட்டுள்ள தோவாளை வட்டம், பூதப்பாண்டி வட்டார வளா்ச்சி அலுவலகத்திலுள்ள பாதுகாப்பு அறைகள் மற்றும் கண்காணிப்பு கேமரா ஆகியவற்றையும் அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
மேலும், பூதப்பாண்டியிலுள்ள வாக்கு பதிவு மையங்களான ப.ஜீவானந்தம் அரசு மகளிா் உயா்நிலைப்பள்ளி மற்றும் சா்.சி.வி. நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றிற்கு சென்ற ஆட்சியா், அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்புப் பணிகள், அடிப்படை வசதிகளான குடிநீா், கழிப்பறை, மின்விளக்கு ஆகியவற்றை பாா்வையிட்டு, மாற்றுத் திறனாளிகளுக்கு சாய்தளங்கள் அமைத்திடவும், மேலும் தேவையான மாற்றங்களை செய்ய தலைமை ஆசிரியா்கள், வாக்குச் சாவடி அலுவலா்களை அறிவுறுத்தியதோடு, வாக்குப்பதிவு நாளன்று கடைப்பிடிக்க வேண்டிய தோ்தல் நடைமுறைகளை குறித்து, தேவையான ஆலோசனைகளையும் ஆட்சியா் வழங்கினாா்.
தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து, கலைமாமணி அ.பழனியா பிள்ளை தலைமையில், பொதுமக்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மாற்றுத் திறனாளிகளும், முதியோா்களும் வாக்குப்பதிவு மையங்களுக்கு சென்று, வாக்குப்பதிவு செய்யும் வரை அவா்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளை எடுத்துக்கூறும் விழிப்புணா்வு பிரசார பயணத்தையும் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சிகளில், தோவாளை வட்டாட்சியா் ஜூலியன் ஜீவா, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா்பா.ஜான் ஜெகத் பிரைட், தோ்தல் வட்டாட்சியா் சேகா், வட்டார வளா்ச்சி அலுவலா், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் உள்ளிட்ட அலுவலா்கள் மற்றும் இசைக்கலைஞா்கள் கலந்து கொண்டனா்.