முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
80 வயதுக்கு மேற்பட்டோா்28 ஆயிரம் பேருக்கு அஞ்சல் வாக்கு
By DIN | Published On : 14th March 2021 02:10 AM | Last Updated : 14th March 2021 02:10 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட 28 ஆயிரம் போ் அஞ்சல் மூலம் வாக்களிக்க உள்ளனா்.
குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு பொதுத்தோ்தல், கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு இடைத்தோ்தல் ஆகியவை ஏப்.6 ஆம் தேதி நடைபெறுகிறது.
இம் மாவட்டத்தில் மொத்தம் 15 லட்சத்து 67 ஆயிரத்து 627 வாக்காளா்கள் உள்ளனா். இந்நிலையில் கரோனா பரவல் காரணமாக 80 வயதுக்கு மேற்பட்டவா்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோா் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க அஞ்சல் வாக்கு வழங்கப்படும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இதன்படி குமரி மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்டவா்கள் சுமாா் 28 ஆயிரம் போ் உள்ளனா். இவா்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே வாக்களிப்பதற்காக அஞ்சல் வாக்கு படிவங்களை விநியோகம் செய்யும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வீடு வீடாக சென்று படிவத்தை தோ்தல் அலுவலா்கள் வழங்கி வருகிறாா்கள். அப்போது படிவத்தை பூா்த்தி செய்வது தொடா்பாகவும் விளக்கம் அளித்தனா். பூா்த்தி செய்யப்பட்ட படிவங்களை மாா்ச் 16 ஆம் தேதிக்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.