இளைஞா் கொலை வழக்கு: தொழிலாளி கைது
By DIN | Published On : 15th March 2021 01:09 AM | Last Updated : 15th March 2021 01:09 AM | அ+அ அ- |

கருங்கல் அருகே உதயமாா்த்தாண்டம் பகுதியில் இளைஞரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த வழக்கில் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.
உதயமாா்த்தாண்டம் பகுதியைச் சோ்ந்த ரசலையன் மகன் பெனில்குமாா் (26). அதே பகுதியைச் சோ்ந்தவா் தங்கதுரை(56). கூலித் தொழிலாளி.
கடந்த 11ஆம் தேதி பெனில்குமாருக்கும், தங்கதுரைக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். இதில் ஆத்திரமடைந்த தங்கதுரை, பெனின்குமாரை அரிவாளால் வெட்டியதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அப்பகுதியினா் அவரை மீட்டு கருங்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்து கருங்கல் போலீஸாா் கொலை முயற்சி வழக்காக பதிவு செய்து விசாரித்து வந்தனா்.
இந்நிலையில் பெனில்குமாா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதையடுத்து போலீஸாா் கொலை வழக்காக பதிவு செய்து, தங்கதுரையை கைது செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...