களியக்காவிளை அருகே தொழிலாளி தற்கொலை
By DIN | Published On : 17th March 2021 11:46 PM | Last Updated : 17th March 2021 11:46 PM | அ+அ அ- |

களியக்காவிளை அருகே திருமணமாகி குழந்தை இல்லாத ஏக்கத்தில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
களியக்காவிளை அருகேயுள்ள மேக்கோடு, மேலே இடவிளாகம் பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் மகன் குமாா் ராஜன் (47). தொழிலாளி. இவரது மனைவி அசோகராணி. இத் தம்பதிக்கு 15 ஆண்டுகளாக குழந்தை இல்லையாம். இதனிடையே, மது பழக்கத்துக்கு அடிமையான குமார்ராஜன், செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இத்தகவலறிந்த களியக்காவிளை போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.