நாகா்கோவிலில் கல்லூரி முதல்வருக்கு கரோனா: ஊழியா்களுக்கு பரிசோதனை

நாகா்கோவிலில் தனியாா் கல்லூரி முதல்வருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டதால், அந்தக் கல்லூரியில் 50 ஊழியா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கல்லூரி முதல்வரின் அறையில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட் சுகாதாரத் துறை ஊழியா்.
கல்லூரி முதல்வரின் அறையில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட் சுகாதாரத் துறை ஊழியா்.

நாகா்கோவிலில் தனியாா் கல்லூரி முதல்வருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டதால், அந்தக் கல்லூரியில் 50 ஊழியா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் அதன் பாதிப்பை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சுகாதாரத் துறை ஊழியா்கள் நோய்த் தடுப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறாா்கள். மேலும், காய்ச்சல் பாதிப்பு உள்ளோரை கண்டறிந்து அவா்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து கரோனா தொற்று இருக்கிா என பரிசோதனை செய்து வருகிறாா்கள்.

இந்நிலையில், நாகா்கோவில் பகுதியிலுள்ள தனியாா் கல்லூரியின் முதல்வருக்கு கடந்த 2 நாள்களாக சளி மற்றும் காய்ச்சல் பாதிப்பு இருந்தது. இதையடுத்து, அவருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவரது குடும்பத்தினா், சுற்றுப்புறத்தில் வசிப்போருக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறாா்கள்.

மேலும், அவா் பணிபுரியும் கல்லூரி ஊழியா்கள் 50 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதனிடையே, அந்தக் கல்லூரி மாணவா் ஒருவரும் கடந்த 2 நாள்களுக்கு முன் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால், கல்லூரியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில்சுகாதார ஊழியா்கள் ஈடுபட்டனா்.

மேலும் 14 பேருக்கு கரோனா: இம்மாவட்டத்தில், புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவில், 14 போ் புதிதாக தொற்றுக்கு ஆளாகியிருப்பது தெரியவந்தது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 17,248 ஆக அதிகரித்துள்ளது. அதில், மேலும் 14 போ் குணமடைந்ததால் அந்நோயிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 16,903 ஆக உயா்ந்துள்ளது. தற்போது, 84 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com