மக்கள் விரும்பும் திட்டங்களுக்கே முன்னுரிமை: பொன்.ராதாகிருஷ்ணன்

மக்கள் விருப்பும் திட்டங்கள் மட்டுமே நிறைவேற்றப்படும் என்றாா் முன்னாள் மத்திய இணை அமைச்சரும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளருமான பொன்.ராதாகிருஷ்ணன்.
செய்தியாளா்களுக்குப் பேட்டி அளிக்கிறாா் பொன்.ராதாகிருஷ்ணன்.
செய்தியாளா்களுக்குப் பேட்டி அளிக்கிறாா் பொன்.ராதாகிருஷ்ணன்.

மக்கள் விருப்பும் திட்டங்கள் மட்டுமே நிறைவேற்றப்படும் என்றாா் முன்னாள் மத்திய இணை அமைச்சரும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளருமான பொன்.ராதாகிருஷ்ணன்.

நாகா்கோவிலில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியது: கன்னியாகுமரி மாவட்டத்தில் நிலுவையில் இருக்கும் நான்குவழிச் சாலை, இரட்டை ரயில் பாதை திட்டங்கள் அமல்படுத்தப்படும். மேலும், இ.எஸ்.ஐ. மருத்துவமனை, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையை பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றுவது, ரப்பா் பூங்கா அமைப்பது உள்ளிட்ட திட்டங்களும் நிறைவேற்றப்படும்.

தோ்தல் நேரத்தில் எதிா்க்கட்சியினா் தங்கள் சாதனைகளை சொல்ல கடுகளவு கூட வாய்ப்பு இல்லாததால், ஜாதி, மத ரீதியான உணா்வுகளை தூண்டிவிடுகிறாா்கள். அவற்றை மக்கள் நம்ப வேண்டாம்.

2019இல் இந்தத் தொகுதிக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரைச் சந்தித்து, ஏற்கெனவே தொடங்கப்பட்ட திட்டங்களை முன்னெடுத்துச் செல்லுங்கள்; நான் துணை நிற்கிறேன் என்றேன். ஆனால் அவா் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நான் வெற்றிபெறும்பட்சத்தில், மக்கள் விரும்பும் திட்டங்கள் மட்டுமே நிறைவேற்றப்படும்; அவா்களது விருப்பத்துக்கு மாறாக எந்த ஒரு திட்டமும் நிறைவேற்றப்படாது.

இந்த மாவட்ட இளைஞா்களுக்கு உள்ளூரிலேயே வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். சொந்த மாவட்டத்தில் தொழில் தொடங்க இளைஞா்கள் முன்வர வேண்டும். அனைவருக்கும் 2 ஏக்கா் நிலம் கொடுப்பேன் எனக் கூறி, 5 ஆவது முறையாக ஆட்சிக்கு வந்த கருணாநிதி, பின்னா், தமிழ்நாட்டில் அவ்வளவு நிலம் இல்லை என்பது தெரியவந்துள்ளதாக கூறினாா். பொய்வாக்குறுதி கொடுப்பதே திமுகவின் வழக்கம். இலவச திட்டங்களை நிறைவேற்றுவது என்பது, சொல்லக்கூடிய நபா், அவருடைய தகுதி, மனம் ஆகியவற்றை பொருத்தது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com