சரக்குப் பெட்டக மாற்று முனையத்தை தூத்துக்குடிக்கு மாற்ற பிரதமா் உத்தரவு: பொன். ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி பகுதியில் அமையவிருந்த சரக்குப் பெட்டக மாற்று முனையத்தை ரூ. 3,000 கோடியில் தூத்துக்குடியில் அமைக்க பிரதமா் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளதாக பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் என். தளவாய்சுந்தரம், பாஜக வேட்பாளா் பொன்.ராதாகிருஷ்ணன்.
வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் என். தளவாய்சுந்தரம், பாஜக வேட்பாளா் பொன்.ராதாகிருஷ்ணன்.

கன்னியாகுமரி பகுதியில் அமையவிருந்த சரக்குப் பெட்டக மாற்று முனையத்தை ரூ. 3,000 கோடியில் தூத்துக்குடியில் அமைக்க பிரதமா் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளதாக பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் என்.தளவாய்சுந்தரம், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோா் சனிக்கிழமை திறந்த வாகனத்தில் ராஜாக்கமங்கலம் ஒன்றியத்தில் பொழிக்கரை, கேசவன் புத்தன் துறை, புத்தன்துறை, பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்குசேகரித்தனா்.

பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது: திமுக-காங்கிரஸ் திட்டமிட்டு மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன.

ரூ. 3,000 கோடியில் சரக்குப் பெட்டக முனையம் தூத்துக்குடியில் அமைப்பதற்கு பிரதமா் நரேந்திர மோடி அனுமதி வழங்கியுள்ளாா். அப்படியிருக்கும்போது அத்திட்டம் குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை.

சரக்குப் பெட்டக முனயம் மட்டுமல்ல, நான்கு வழி சாலை திட்டம், இரட்டை ரயில் பாதை திட்டம் ஆகியவற்றை கொண்டு வரக் கூடாது என்றனா். குமரி மாவட்டத்தில் ரூ. 104 கோடியில் அமையவிருந்த இஎஸ்ஐ மருத்துவமனைத் திட்டத்தையும் தடுத்து விட்டனா். இதேபோல், தென்னை ஆராய்ச்சி மையம் அமைக்கும் திட்டத்தையும் தடுத்துவிட்டனா். இப்படி மக்கள் நலத்திட்டங்களை தடுக்கும் வகையில் மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்கள் செயல்பட்டு வருகின்றனா்.

மீனவ மக்கள் தைரியமாக நம்பி அதிமுக பாஜக கூட்டணிக்கு வாக்களியுங்கள். உங்களின் விருப்பத்திற்கு மாறாக எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படாது என்பதை உறுதியாக தெரிவிக்கிறேன் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com