குருசுமலை திருப்பயணம் நிறைவு

குருசுமலை திருப்பயணம் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
குருசுமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிறைவு விழா திருப்பலி.
குருசுமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிறைவு விழா திருப்பலி.

குருசுமலை திருப்பயணம் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

குருசுமலை திருப்பயணம் கடந்த 14ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து 8 நாள்கள் நடைபெற்ற இத்திருப்பயணம் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

நிறைவு நாளில், நெய்யாற்றின்கரை மறைமாவட்ட ஆயா் வின்சென்ட் சாமுவேல் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. இதில், குருகுல முதல்வா் கிறிஸ்துதாஸ், குருசுமலை அதிபா் வின்சென்ட் கே. பீட்டா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நிறைவு நாளில் குமரி மாவட்டத்திலிருந்தும், கேரளத்திலிருந்தும் வந்த ஏராளமான மக்கள், குருசுமலை உச்சிக்குச் சென்று சிலுவை வழிபாடு செய்தனா்.

புனித வெள்ளி: குருசுமலையில் பெரிய வியாழன் மற்றும் புனித வெள்ளி ஆகிய தினங்களையொட்டி வருகிற ஏப். 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் சிறப்பு திருப்பயணம் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com