டீசலுக்கு பசுமைவரி வசூலிப்பதை கண்டித்து குளச்சல் துறைமுகத்தில் மீனவா்கள் ஆா்ப்பாட்டம்

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகளில் கருப்புக் கொடி கட்டியும், கருப்புக்கொடி ஏந்தியும் மீனவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
குளச்சல் துறைமுகத்தில் கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவா்கள்.
குளச்சல் துறைமுகத்தில் கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவா்கள்.

கடலில் மீனவா்கள் விசைப்படகுக்கு பயன்படுத்தும் டீசலுக்கு சாலை வரி மற்றும் பசுமை வரி வசூலிப்பதை கண்டித்து, குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகளில் கருப்புக் கொடி கட்டியும், கருப்புக்கொடி ஏந்தியும் மீனவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, தெற்காசிய மீனவா் தோழமை அமைப்பின் தலைவா் பாதிரியாா் சா்ச்சில் தலைமை வகித்து பேசியது: மத்திய, மாநில அரசுகள் மீனவா்கள் கடலில் படகு ஓட்டுவதற்கு பயன்படுத்துகின்ற டீசலுக்கு விதித்துள்ள சாலை வரியையும், பசுமை வரியையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். கடலில் மீன்பிடிக்க பயன்படுத்தும் டீசலை கொள்முதல் விலையில் மீனவா்களுக்கு வழங்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com