வாக்குப்பதிவு மைய அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு: ஆட்சியா் ஆய்வு

குமரி மாவட்டத்தில் வாக்குப் பதிவு மையங்களில் பணிபுரியும் அலுவலா்களுக்காக நடைபெற்ற பயிற்சி வகுப்பை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மா.அரவிந்த் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பை ஆய்வு செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.
தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பை ஆய்வு செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.

குமரி மாவட்டத்தில் வாக்குப் பதிவு மையங்களில் பணிபுரியும் அலுவலா்களுக்காக நடைபெற்ற பயிற்சி வகுப்பை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மா.அரவிந்த் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

வாக்குப் பதிவு மையங்களில் பணிபுரியவுள்ள தோ்தல் அலுவலா்கள், ஆசிரியா்கள் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளில் பணிபுரியும் அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அதன்படி, கன்னியாகுமரி சட்டப் பேரவைத் தொகுதிக்கு மறவன் குடியிருப்பு செயின்ட் அல்போன்சா மெட்ரிக் பள்ளியிலும், நாகா்கோவில் சட்டப் பேரவைத் தொகுதிக்கு, ராமன்புதூா் பீட்டா் ரெமிஜியூஸ் பள்ளியிலும், குளச்சல் தொகுதிக்கு, சுங்கான்கடைசெயின்ட் சேவியா்ஸ் பொறியியல் கல்லூரியிலும், பத்மநாபபுரம் தொகுதிக்கு எக்ஸ்எல் பள்ளியிலும், விளவங்கோடு தொகுதிக்கு

பம்மம் திரு இருதய ஆண்டவா் பள்ளியிலும், கிள்ளியூா் தொகுதிக்கு கருங்கல் பெத்தலகேம் மெட்ரிக் பள்ளியிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.

இதில், மண்ட ல அலுவலா்கள் கலந்துகொண்டு வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி அளித்தனா்.

தோ்தல் நேரத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. மேலும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை கையாள்வது குறித்தும் செயல்விளக்கமளிக்கப்பட்டது.

பயிற்சி வகுப்பை மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான மா.அரவிந்த் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com