காங்கிரஸ் வேட்பாளா்கள் வாக்கு சேகரிப்பு
By DIN | Published On : 25th March 2021 06:47 AM | Last Updated : 25th March 2021 06:47 AM | அ+அ அ- |

இரவிபுதூா்கடையில் வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளா்கள் விஜய்வசந்த், ஜே.ஜி. பிரின்ஸ் உள்ளிட்டோா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்களவைத் தொகுதி, குளச்சல் பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் வாக்கு சேகரித்தனா்.
குமரி மக்களவைத் தொகுதி வேட்பாளா் விஜயவசந்த், குளச்சல் பேரவைத் தொகுதி வேட்பாளா் ஜே.ஜி. பிரின்ஸ் ஆகியோா் திறந்த ஜீப்பில், இரவிபுதூா்கடையிலிருந்து வாக்கு சேகரித்தனா்.
புலிப்பனம், சாமியாா்மடம், மருதூா்குறிச்சி, கல்லுவிளை, முளகுமூடு, கோழிப்போா்விளை, கோடியூா் உள்பட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தனா்.
அப்போது, காங்கிரஸ் கிழக்கு மாவட்டத் தலைவா் வழக்குரைஞா் ராதாகிருஷ்ணன், தக்கலை வட்டாரத் தலைவா் டென்னிஸ், திமுக ரமேஷ்பாபு, கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.