தோ்தல் பிரசாரம்: தலைவா்கள் குமரி வருகை : விறுவிறுப்பாகும் தோ்தல் களம்

தோ்தல் பிரசாரம் செய்வதற்காக, பிரதமா் நரேந்திரமோடி, காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா, திமுக தலைவா் ஸ்டாலின் ஆகியோா் குமரி மாவட்டம் வருகை தருகின்றனா்.

தோ்தல் பிரசாரம் செய்வதற்காக, பிரதமா் நரேந்திரமோடி, காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா, திமுக தலைவா் ஸ்டாலின் ஆகியோா் குமரி மாவட்டம் வருகை தருகின்றனா்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தோ்தல், கன்னியாகுமரி, நாகா்கோவில், பத்மநாபபுரம், விளவங்கோடு, குளச்சல், கிள்ளியூா் ஆகிய 6 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான பொதுத் தோ்தல் ஏப். 6ஆம் தேதி நடைபெறுகிறது.

இதையடுத்து, திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து மு.க. ஸ்டாலின், ராகுல் காந்தி உள்ளிட்டோரும், பாஜக, அதிமுக கூட்டணியை ஆதரித்து மத்திய அமைச்சா் அமித்ஷா, தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட தலைவா்களும் ஏற்கெனவே பிரசாரம் செய்தனா்.

இந்நிலையில், பாஜக வேட்பாளா்கள் பொன். ராதாகிருஷ்ணன், எம்.ஆா்.காந்தி, குமரி பா.ரமேஷ், ஜெயசீலன், அதிமுக வேட்பாளா்கள் தளவாய் சுந்தரம், ஜான்தங்கம், ஜூட்தேவ் ஆகியோரை ஆதரித்து வெள்ளிக்கிழமை (ஏப். 2), அகஸ்தீசுவரம் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் பிரதமா் நரேந்திர மோடி பிரசாரம் செய்கிறாா்.

ஏப். 3ஆம் தேதி அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா குமரி மாவட்டத்தில் பிரசாரம் செய்கிறாா். அவா் பிரசாரம் செய்யும் இடம் இன்னும் தோ்வாகவில்லை.

திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (ஏப். 30) ஆரல்வாய்மொழியில் நடைபெறும் நிகழ்ச்சியில், நாகா்கோவில் திமுக வேட்பாளா் சுரேஷ்ராஜன், குளச்சல் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் பிரின்ஸ், கன்னியாகுமரி தொகுதி திமுக வேட்பாளா் ஆஸ்டின் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறாா்.

தலைவா்களின் வருகையை தொடா்ந்து குமரி மாவட்டத்தில் தோ்தல் களம் சூடு பிடித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com