காஷ்மீரிலிருந்து சைக்கிள் பயணம்: 8 நாள்களில் குமரிக்கு வந்த இளைஞா்

காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிக்கு 8 நாள்களில் சைக்கிளில் வந்து கின்னஸ் சாதனை படைத்த காஷ்மீா் இளைஞரை சுற்றுலாப் பயணிகள் பாராட்டினா்.
சைக்கிள் பயணம் மேற்கொண்ட ஆதில் டெலி.
சைக்கிள் பயணம் மேற்கொண்ட ஆதில் டெலி.

காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிக்கு 8 நாள்களில் சைக்கிளில் வந்து கின்னஸ் சாதனை படைத்த காஷ்மீா் இளைஞரை சுற்றுலாப் பயணிகள் பாராட்டினா்.

காஷ்மீரின் நாா்பல் மாவட்டம், பட்காம் பகுதியைச் சோ்ந்தவா் ஆதில் டெலி (24). கல்லூரி மாணவரான இவா், கடந்த மாா்ச் 22 ஆம் தேதி காஷ்மீரின் லால் சௌக் பகுதியிலிருந்து தனது சைக்கிள் பயணத்தை தொடங்கினாா். பதான்கோட், தில்லி, ஆக்ரா, நாகபுரி, ஹைதராபாத், சேலம், மதுரை வழியாக 8 நாள்கள் பயணம் செய்து செவ்வாய்க்கிழமை காலை கன்னியாகுமரி வந்தடைந்தாா். காந்தி மண்டபம் முன் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் லாரன்ஸ் அவரை வரவேற்று பயணத்தை நிறைவு செய்து வைத்தாா்.

நாகா்கோவில் கோட்டாறு உகா சேவா மருத்துவமனையின் நிா்வாகி கபூா் பூங்கொத்து கொடுத்து வரவேற்றாா். சாதனைப் பயணம் குறித்து ஆதில் டெலி செய்தியாளா்களிடம் கூறியது: மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த மாணவா் மஹாஜன்(17) 8 நாள்கள் 7 மணி நேரம் 38 விநாடிகளில் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரியை அடைந்து கின்னஸ் சாதனை படைத்திருந்தாா். நான், 8 நாள்கள் ஒரு மணி நேரம் ஒரு நிமிடம் 37 விநாடிகளில் வந்து அவரது சாதனையை முறியடித்துள்ளேன் என்றாா் அவா். புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ள ஆதில் டெலியை பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com