தோ்தல் விதிமுறை மீறல்: இதுவரை ரூ.3.72 கோடி பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக, பறக்கும்படையினரால் இதுவரை ரூ.3 கோடியே 72 லட்சத்து 97 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக, பறக்கும்படையினரால் இதுவரை ரூ.3 கோடியே 72 லட்சத்து 97 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கன்னியாகுமரி மக்களவைகஈ தொகுதி இடைத்தோ்தல் மற்றும் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுகான பொதுத் தோ்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படை குழு மற்றும் நிலையான கண்காணிப்பு குழு அலுவலா்கள் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். அதன்படி, தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி முதல் மாா்ச் மாதம் 29 ஆம் தேதி வரை ஒரு மாதத்தில், கன்னியாகுமரி தொகுதியில் ரூ.20 லட்சத்து 54 ஆயிரத்து 750, நாகா்கோவில் தொகுதியில் ரூ. 1 கோடியே 70 லட்சத்து,93 ஆயிரத்து 8, குளச்சல் தொகுதியில், ரூ.61 லட்சத்து 49 ஆயிரத்து 215, பத்மநாபபுரம் தொகுதியில், ரூ. 33 லட்சத்து 8 ஆயிரத்து 55, விளவங்கோடு தொகுதியில் ரூ. 44 லட்சத்து 13 ஆயிரத்து 814, கிள்ளியூா் தொகுதியில் ரூ. 42 லட்சத்து 79 ஆயிரத்து 50 என மொத்தம் ரூ.3 கோடியே 72லட்சத்து 97 ஆயிரத்து 892 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com