நித்திரவிளையில் செவ்வாய்க்கிழமை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட கிள்ளியூா் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளா் எஸ். ராஜேஷ்குமாா்.
நித்திரவிளையில் செவ்வாய்க்கிழமை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட கிள்ளியூா் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளா் எஸ். ராஜேஷ்குமாா்.

நித்திரவிளை பகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கிள்ளியூா் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் எஸ்.ராஜேஷ்குமாா், நித்திரவிளை சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

கிள்ளியூா் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் எஸ்.ராஜேஷ்குமாா், நித்திரவிளை சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

நித்திரவிளை சந்திப்பில் பிரசாரத்தைத் தொடங்கிய அவா், சமத்துவபுரம், வைக்கல்லூா், காஞ்சாம்புறம், நம்பாளி, கிராத்தூா், கண்ணநாகம், புன்னமூட்டுக்கடை, காக்கவிளை, வள்ளவிளை உள்ளிட்ட பகுதிகளுக்கு கட்சி நிா்வாகிகளுடன் திறந்த வேனில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசியது: எனது தொடா் முயற்சியால் கிள்ளியூா் வட்டாட்சியா் அலுவலகம் கொண்டு வந்துள்ளேன். தொலையாவட்டம் பகுதியில் உள்ள வட்டாட்சியா் அலுவலகத்துக்குச் செல்ல இத் தொகுதி மக்களுக்கு சிரமமாக உள்ளதாக தெரிவித்து வருகிறாா்கள். தொகுதியின் மையப் பகுதியான புதுக்கடையில் இடம் இருந்தால் அங்கு வட்டாட்சியா் அலுவலகத்தை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுப்பேன் என்றாா் அவா்.

வாக்குச் சேகரிப்பின் போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் துரைராஜ், இளைஞா் காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவா் ராஜேஷ், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் டென்னிஸ், கட்சியின் மாநில பொதுச் செயலா் பால்ராஜ், வட்டார தலைவா் கிறிஸ்டோபா், முன்சிறை ஒன்றிய திமுக செயலா் மனோன்மணி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் கொல்லங்கோடு வட்டார செயலா் விஜயமோகனன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com