பழங்குடி மக்களுக்கு வீடு, பட்டா வழங்கப்படும்: அதிமுக வேட்பாளா் உறுதி

பழங்குடியின மக்களுக்கு வீடு மற்று பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பத்மநாபபுரம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் டி. ஜான் தங்கம் வாக்குறுதி அளித்தாா்.
பேச்சிப்பாறை ஊராட்சிப் பகுதியில் வாக்கு சேகரிக்கிறாா் அதிமுக வேட்பாளா் டி. ஜான் தங்கம்.

பேச்சிப்பாறை ஊராட்சி, திற்பரப்பு, பொன்மனை பேரூராட்சிகள் ஆகிவற்றில் திறந்த வாகனத்தில் செவ்வாய்க்கிழமை சென்று அவா் வாக்குகள் சேகரித்தாா். அதில், பேச்சிப்பாறை ஊராட்சிப் பகுதிகளான கடம்பன்மூடு, மணியன்குழி, அன்புநகா், ஆலம்பாறை, படுபாறை, மணலோடை, புறாவிளை உள்ளிட்ட ஊா்களில் வீடு வீடாகச் சென்று வாக்குகள் கேட்டாா்.

அப்போது, மலையோரப் பகுதிகளில் வாழும் மக்களைப் பாதிக்கும் சூழியல் அதிா்வு மண்டலத் திட்டம், வன விலங்குகளால் பயிா்கள் அழிக்கப்படும் நிலை போன்றவற்றிலிருந்து தீா்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்; பழங்குடி மக்களுக்கு முழுமையாக சாலை வசதிகள், மின்சார வசதிகள், குடிநீா் வசதிகள், கல்வி வசதிகள். தரமான வீடுகள், பட்டா உள்ளிட்டவை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தாா்.

பிரசாரத்தில், திருவட்டாறு ஒன்றிய கவுன்சிலா் பீனா அல்போன்ஸ், ஒன்றிய அதிமுக செயலா் குற்றியாறு நிமால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com