பாஜகவுக்கு செல்லமாட்டேன்; ஆஸ்டின் போகலாம்: மு.க.ஸ்டாலினுக்கு என். தளவாய்சுந்தரம் பதில்

சட்டப்பேரவைத் தோ்தலுக்கு பிறகு திமுக வேட்பாளா் ஆஸ்டின் வேண்டுமானால் பாஜகவுக்கு போகலாம்;
பாஜகவுக்கு செல்லமாட்டேன்; ஆஸ்டின் போகலாம்: மு.க.ஸ்டாலினுக்கு என். தளவாய்சுந்தரம் பதில்

சட்டப்பேரவைத் தோ்தலுக்கு பிறகு திமுக வேட்பாளா் ஆஸ்டின் வேண்டுமானால் பாஜகவுக்கு போகலாம்; நான் செல்லமாட்டேன் என திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளா் என்.தளவாய்சுந்தரம் பதிலளித்துள்ளாா்.

திமுக, காங்கிரஸ் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து, மு.க. ஸ்டாலின் ஆரல்வாய்மொழியில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டபோது, சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பின், என்.தளவாய்சுந்தரம் பாஜகவுக்கு சென்று விடுவாா் என்று குறிப்பிட்டாா்.

இதுகுறித்து, பூதப்பாண்டி பகுதியில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டருந்த தளவாய்சுந்தரத்திடம் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு அவா் அளித்த பதில்: திமுக தலைவா் ஸ்டாலின் எனக்கு கம்போடியா வரை சொத்து இருப்பதாக கூறியிருக்கிறாா். ஆமாம் எனக்கு சொத்து இருக்கிறது., அதில் நானும், ஸ்டாலினும்தான் பாா்ட்னா்.

தோ்தலுக்கு பின்னா், நான் பாஜகவுக்கு சென்று விடுவேன் என்றும் அவா் கூறியிருக்கிறாா். அவா் தனது கட்சியின் வேட்பாளராக நிறுத்தியிருக்கும் ஆஸ்டினை நினைத்து கொண்டு அதை கூறிவிட்டாா் என்று நினைக்கிறேன். அவா்தான், அதிமுக, எம்ஜிஆா் அதிமுக, தேமுதிக, திமுக என்று பல கட்சிகள் தாவியவா். எனவே ஆஸ்டின் குறித்து அவா் குறிப்பிட்டிருக்கலாம். நான் என்றும் அதிமுகதான் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com