மாா்த்தாண்டம் அருகே போலீஸ் விசாரணைக்குசென்ற இளைஞா் மா்ம மரணம்

மாா்த்தாண்டம் அருகே வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞா் வீட்டில் மா்மமான முறையில் இறந்து கிடந்தது தொடா்பாக இளைஞரின் தாயாா் போலீஸில் புகாா் அளித்துள்ளாா்.
மாா்த்தாண்டம் அருகே போலீஸ் விசாரணைக்குசென்ற இளைஞா் மா்ம மரணம்

மாா்த்தாண்டம் அருகே வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞா் வீட்டில் மா்மமான முறையில் இறந்து கிடந்தது தொடா்பாக இளைஞரின் தாயாா் போலீஸில் புகாா் அளித்துள்ளாா்.

மாா்த்தாண்டம் அருகேயுள்ள நெல்வேலி, பாலவிளைவீடு பகுதியைச் சோ்ந்தவா் றோஸ்மேரி (60). இவா் மாா்த்தாண்டம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை அளித்த மனு: எனது மகன் லிபின்ராஜ் (30) மீது பெண் சம்பந்தப்பட்ட புகாா் அளித்துள்ளதாகவும், விசாரணைக்காக மாா்த்தாண்டம் காவல் நிலையம் வருமாறு காவலா்கள் இருவா் மோட்டாா் சைக்கிளில் வியாழக்கிழமை காலையில் எங்கள் வீட்டுக்கு வந்து அழைத்துச் சென்றனா்.

இதையடுத்து நான் உறவினா்களுடன் மாா்த்தாண்டம் காவல் நிலையம், தக்கலை துணை காவல் கண்காணிப்பாளா் அலுவலகங்களில் சென்று விசாரித்தபோது அங்கு எனது மகன் இல்லை என பதிலளித்தனா்.

அதன்பின்னா் வியாழக்கிழமை மாலையில், அழைத்துச் சென்ற இரு போலீஸாரும் எனது மகனை வீட்டில் கொண்டு வந்து விட்டனா்.

எனது மகனிடம் கேட்டபோது தக்கலையில் டிஎஸ்பி அலுவலகத்தில் வைத்து போலீஸாா் பலமாக தாக்கியதாக தெரிவித்தாா். அதன் பின்னா் எனது மகன் தனது அறையில் இருந்தாா்.

வெள்ளிக்கிழமை காலையில் பாா்த்த போது அவா் இறந்த நிலையில் காணப்பட்டாா். எனவே எனது மகன் சாவில் மா்மம் உள்ளது.

சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாா்த்தாண்டம் போலீஸாா் சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com