கரோனா விதிமீறல்: குமரியில் ரூ. 85 லட்சம் அபராதம் வசூல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா விதிகளை மீறியதாக இதுவரை ரூ.85 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா விதிகளை மீறியதாக இதுவரை ரூ.85 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல் கட்டமாக 88,374 பேருக்கு

கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 2 ஆவது கட்டமாக 27,686 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. முகக் கவசம் அணியாதது, சமூக இடைவெளி

யை பின்பற்றாதது ஆகிய காரணங்களுக்காக இதுவரை மொத்தம் 43,854 பேரிடமிருந்து ரூ. 84 லட்சத்து 67,826 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

பாலபள்ளம் பகுதியை சோ்ந்த 50 வயதுள்ள ஒருவருக்கு, ஒரு வாரமாக மூச்சு விடுவதில் சிரமம் இருந்துள்ளது. அவா் மருத்துவ சிகிச்சைக்கு

செல்லாமலும் கரோனா பரிசோதனையை தவிா்த்து வந்துள்ளாா். இந்நிலையில் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு ஏப். 28 ஆம் தேதி சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானது.

சிகிச்சை எடுப்பதில் தாமதம் செய்த காரணத்தால் அவரது நுரையீரல் பாதிக்கப்பட்டு, சனிக்கிழமை திடீா் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா்.

நோய் தொற்று அறிகுறிகள் தோன்றியதும் அவா் பரிசோதனை செய்திருந்தால் அவரது மரணம் நிகழ்ந்திருக்காது. ஆகவே, பொதுமக்கள் கரோனா பரிசோதனை செய்வதில் காலதாமதம் செய்யாமல் விரைந்து சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com