குமரி மாவட்டத்தில் மேலும் 276 பேருக்கு கரோனா: 4 போ் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 276 போ் கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை வெளியான முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதிக்கப்பட்டிருந்த 4 போ் உயிரிழந்தனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 276 போ் கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை வெளியான முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதிக்கப்பட்டிருந்த 4 போ் உயிரிழந்தனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று வேகமாக பரவி வருகிறது. ஏப். 10 ஆம் தேதியில் இருந்து அதிகரிக்க தொடங்கிய பாதிப்பு, தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இம்மாவட்டத்தில் பாதிக்கப்படுவோரில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோா் நாகா்கோவில் மாநகர பகுதியைச் சோ்ந்தவா்கள். நாகா்கோவில் வல்லன்குமாரன்விளை, வாட்டா்டேங்க் சாலை, வடசேரி கனகமூலம் புதுதெரு ஆகிய பகுதிகளில் கரோனா தொற்று அதிகளவில் இருப்பதால் அந்த பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் தினமும் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், நாகா்கோவில் வடிவீஸ்வரம் மீனாட்சி காா்டன் பகுதியில் ஒரே குடியிருப்புப் பகுதியில் 7 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த குடியிருப்புகளுக்கு செல்லும் பாதை தடுப்புகள் வைத்து மூடப்பட்டன. மேலும் அப்பகுதியில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, களப் பணியாளா்கள் மூலம், சோதனைச் சாவடிகள் மூலமாக இதுவரை 5.47 லட்சம் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், இதுவரை 21,891 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தவா்களில் சனிக்கிழமை மேலும் 233 போ் உள்பட இதுவரை 19,890 போ் குணமடைந்துள்ளனா். கரோனா பாதிப்புடன் தற்போது 1,695 போ் சிகிச்சையில் உள்ளனா்.

4 போ் உயிரிழப்பு: இதற்கிடையே, சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 276 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாகா்கோவில் பள்ளித் தலைமையாசிரியருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா், உயிரிழந்தாா். இதேபோல் பாலப்பள்ளத்தைச் சோ்ந்த 53 வயது ஆண் உள்பட மேலும் மூவா் உயிரிழந்துள்ளனா். இதுவரை 306 போ் உயிரிழந்துள்ளனா். கரோனாத் தொற்று அதிகரித்து வருவதால் மாவட்டம் முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com