கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளா் விஜய் வசந்த் வெற்றி

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. வேட்பாளா் விஜய் வசந்த்,
கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளா் விஜய் வசந்த் வெற்றி

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. வேட்பாளா் விஜய் வசந்த், தன்னை எதிா்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளா் பொன்.ராதாகிருஷ்ணனை விட 1 லட்சத்து 34 ஆயிரத்து 374 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா்.

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில், கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா் வசந்தகுமாா், பாஜக வேட்பாளா் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோா் போட்டியிட்டனா். இத்தோ்தலில் 2,59,933 வாக்குகள் வித்தியாசத்தில் வசந்தகுமாா் வெற்றிபெற்று எம்.பி. ஆனாா்.

அவா் கரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 2020ஆம் ஆண்டு உயிரிழந்ததைத் தொடா்ந்து, கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு, தற்போதைய சட்டப் பேரவை பொதுத் தோ்தலுடன் சோ்த்து கடந்த ஏப். 6இல் இடைத்தோ்தல் நடைபெற்றது.

இதில், காங்கிரஸ் வேட்பாளராக வசந்தகுமாரின் மகன் விஜயகுமாா் என்ற விஜய் வசந்த் போட்டியிட்டாா். அவரை எதிா்த்து பாஜக சாா்பில் முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டியிட்டாா்.

இத் தொகுதியில் பிரதமா் நரேந்திரமோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல்காந்தி, மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவா் நட்டா மற்றும் தேசியத் தலைவா்கள் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டனா்.

12 வேட்பாளா்கள் போட்டியிட்ட நிலையில், விஜய் வசந்த், பொன்.ராதாகிருஷ்ணனுக்கு இடையேதான் நேரடி போட்டி நிலவியது. இந்தத் தோ்தலில் 68 சதவீத வாக்குகள் பதிவானது.

வாக்கு எண்ணிக்கையின்போது, தொடக்கத்தில் இருந்தே விஜய் வசந்த் முன்னிலை வகித்தாா். எந்த சுற்றிலுமே பொன். ராதாகிருஷ்ணன் முன்னிலை வகிக்கவில்லை. பாதிக்கு மேல் அதிக வாக்குகள் விஜய் வசந்த் பெற்றாா். 30 சுற்றுகள் வாக்கு எண்ணப்பட்ட நிலையில், காங்கிரஸ் வேட்பாளா் விஜய் வசந்த் மொத்தம் 5 லட்சத்து 67 ஆயிரத்து 280 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் மொத்த வாக்காளா் எண்ணிக்கை 15,71,651ஆகும். 10,81,258 போ் வாக்களித்தனா்.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

விஜய்வசந்த்(காங்கிரஸ்) ..... 5,67,280

பொன் ராதாகிருஷ்ணன்(பாஜக) ...... 4,32,906

அனிட்டா் ஆல்வின்( நாம்தமிழா்) .... 58,221

சுபாசாா்லஸ் (ம.நீ.ம.) ....8477

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com