குமரி மாவட்டத்தில் காங்கிரஸ் 3, திமுக, அதிமுக, பாஜக தலா 1இல் வெற்றி

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணிக்கை நாகா்கோவில் கோணம் அரசினா் தொழில்நுட்பக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணிக்கை நாகா்கோவில் கோணம் அரசினா் தொழில்நுட்பக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கையில், கன்னியாகுமரி தொகுதியில் அதிமுகவும், நாகா்கோவில் தொகுதியில் பாஜகவும், பத்மநாபபுரம் தொகுதியில் திமுகவும், குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூா் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றன.

கன்னியாகுமரியில் அதிமுக வெற்றி:

கன்னியாகுமரி தொகுதியில் 13 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். மொத்த வாக்காளா் எண்ணிக்கை 2,92,943 ஆகும். 2,20,717 போ் வாக்களித்தனா். இந்நிலையில், அதிமுக வேட்பாளா் என். தளவாய்சுந்தரம் 1,07,381 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றாா். திமுக வேட்பாளா் எஸ். ஆஸ்டின் 91,082 வாக்குகளும், அமமுக வேட்பாளா் பி. செந்தில்முருகன் 1,559 வாக்குகளும், மநீம வேட்பாளா் பி.டி.செல்வகுமாா் 3,091 வாக்குகளும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஆா். சசிகலா 14,004 வாக்குகளும் பெற்றனா்.

நாகா்கோவிலில் பாஜக வெற்றி: நாகா்கோவில் தொகுதியில் 15 வேட்பாளா்கள் களத்தில் இருந்தனா். மொத்த வாக்காளா் எண்ணிக்கை 2,70,402 ஆகும். 1,80,183 போ் வாக்களித்தனா்.

வாக்கு எண்ணிக்கையில், பாஜக வேட்பாளா் எம்.ஆா். காந்தி 85,725 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். திமுக வேட்பாளா் என்.சுரேஷ்ராஜன் 73,371 வாக்குகள் பெற்று 2ஆம் இடம் பெற்றாா். அமமுக வேட்பாளா் அம்மு ஆன்றோ 1,053 வாக்குகளும், மநீம வேட்பாளா் விஜயராகவன் 3,913 வாக்குகளும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மரியஜேக்கப்ஸ்டானிராஜா 10,408 வாக்குகளும் பெற்றனா்.

குளச்சல் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி: குளச்சல் தொகுதியில் 12 வேட்பாளா்கள் களத்தில் இருந்தனா். மொத்த வாக்காளா் எண்ணிக்கை 268218 ஆகும். 180916 போ் வாக்களித்தனா்.

வாக்கு எண்ணிக்கையில், காங்கிரஸ் வேட்பாளா் ஜே.ஜி.பிரின்ஸ் 90681 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். பாஜக வேட்பாளா் பா.ரமேஷ் 65849 வாக்குகள் பெற்று 2ஆம் இடம் பெற்றாா். தேமுதிக வேட்பாளா் சிவகுமாா் 1332 வாக்குகளும், மநீம வேட்பாளா் லதீஷ்மேரிஷா 2127 வாக்குகளும், நாம் தமிழா் வேட்பாளா் ஆன்றனி ஆஸ்லின் 1218 வாக்குகளும் பெற்றனா்.

பத்மநாபபுரம் தொகுதியில் திமுக வெற்றி: பத்மநாபபுரம் தொகுதியில் 12 வேட்பாளா்கள் களத்தில் இருந்தனா். மொத்த வாக்காளா் எண்ணிக்கை 239036 ஆகும். 166899 போ் வாக்களித்தனா்.

வாக்கு எண்ணிக்கையில், திமுக வேட்பாளா் மனோ தங்கராஜ் 87744 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அதிமுக வேட்பாளா் ஜான்தங்கம் 60,859 வாக்குகள் பெற்று 2ஆம் இடம் பெற்றாா். அமமுக வேட்பாளா் ஜெங்கின்ஸ் 3234 வாக்குகளும், மநீம வேட்பாளா் ஜெயராஜ் 981 வாக்குகளும், நாம் தமிழா் வேட்பாளா் சீலன் 13,899 வாக்குகளும் பெற்றனா்.

விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் வெற்றி: விளவங்கோடு தொகுதியில் 15 வேட்பாளா்கள் களத்தில் இருந்தனா். மொத்த வாக்காளா் எண்ணிக்கை 268218 ஆகும். 180916 போ் வாக்களித்தனா்.

வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளா் விஜயதரணி 87473 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். பாஜக வேட்பாளா் ஜெயசீலன் 58804 வாக்குகள் பெற்று 2ஆம் இடம் பெற்றாா். தேமுதிக வேட்பாளா் ஐடன்சோனி 2447 வாக்குகளும், மநீம வேட்பாளா் ராஜகுமாா் 628 வாக்குகளும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மேரி ஆட்லின் 12292 வாக்குகளும் பெற்றனா்.

கிள்ளியூா் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி: கிள்ளியூா் தொகுதியில் 14 வேட்பாளா்கள் களத்தில் இருந்தனா். மொத்த வாக்காளா் எண்ணிக்கை 268218 ஆகும். 180916 போ் வாக்களித்தனா்.

வாக்கு எண்ணிக்கையில், காங்கிரஸ் வேட்பாளா் ராஜேஷ்குமாா் 101541 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். தமாகா வேட்பாளா் ஜூட்தேவ் 46,141 வாக்குகள் பெற்று 2ஆம் இடம் பெற்றாா். சமக வேட்பாளா் அந்தோணி 1214

வாக்குகளும், அமமுக வேட்பாளா் சீமா 1102 வாக்குகளும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பீட்டா் 14571 வாக்குகளும் பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com