குமரியில் கத்திரி வெயில் தொடக்கத்தில் கன மழை

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கிய செவ்வாய்க்கிழமை, கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக இடியுடன் கூடி பலத்த மழை பெய்தது.

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கிய செவ்வாய்க்கிழமை, கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக இடியுடன் கூடி பலத்த மழை பெய்தது.

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை முதல் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கியது. இந்த வெயில் மே 28 ஆம் தேதி வரை நீடிக்கும். இந்த காலக்கட்டத்தில் வெயில் உக்கிரம் அதிகமாக இருக்கும். ஆனால், வழக்கத்துக்கு மாறாக கத்திரி வெயில் தொடங்கிய முதல் நாளே இம்மாவட்டத்தின் பல இடங்களில் கோடை மழை பெய்தது.

ஏற்கெனவே, கடந்த மாதத்திலிருந்து வெப்பச்சலனம் காரணமாக சீரான இடைவெளியில் கோடை மழை பெய்து வருகிறது. எனினும், அவ்வப்போது கோடை வெயிலின் தாக்கமும் உச்ச நிலையில் இருந்துவந்தது.

இந்நிலையில், மாா்த்தாண்டம், திருவட்டாறு, குலசேகரம், அருமனை, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, கீரிப்பாறை, தடிக்காரன் கோணம், சீதப்பால், மாறாமலை, பாலமோா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த மழை நீடித்தால் வேளாண் சாா்ந்த பணிகளை முன்னெடுக்க வசதியாக இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனா்.

களியக்காவிளை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான படந்தாலுமூடு, மடிச்சல், அதங்கோடு, வாறுதட்டு, மங்காடு, குளப்புறம் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலையில் கடும் வெயில் நிலவியது. பிற்பகலில் திடீரென மழைமேகம் திரண்டு குளிா்ந்த காற்று வீசியது. தொடா்ந்து, பிற்பகல் 2.30 மணியளவில் மழை பெய்யத் தொடங்கி அரை மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. மேலும், வானம் மேகமூட்டமாக காணப்பட்டதுடன், சீரான இடைவெளில் சாரல் மழையாக பொழிந்துகொண்டிருந்தது. இந்த மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து இதமான சீதோஷணம் நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com